| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 171 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன் வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல் விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல் கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10 | அக் காக்காய்,Akkakkai - காக்கையே! கண்டார்,Kandar - பார்த்தவர்கள் பழியாமே,Pazhiyaamae - பழியாதபடி கார் வண்ணன்,Kaar vannan - காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய வண்டு ஆர் குழல்,Vandu aar kuzhal - வண்டை ஒத்த கரிய கூந்தலை வார,Vaar - வாரும்படி வா,Vaa - வருவாயாக என்ற,Endru - என்று சொன்ன ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டியின் சொல்,Sol - சொல்லை (க்குறித்த) விண் தோய்,Vin thoy - ஆகாசத்தை அளாவுகின்ற மதிள்,Mathil - மதிளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththoor - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வாருடைய சொல்,Sol - அருளிச் செயல்களை கொண்டாடி,Kondaadi - சிலாகித்து பாட,Paada - பாடப் பெற்றால் வினை தாம்,Vinai thaam - ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும் குறுகா,Kurugaa - சேராவாம். |