Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 174 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
174ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 3
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-3
கறுத்திட்டு,Karuthittu - கோபித்து
எதிர் நின்ற,Ethir Nindra - தன்னை எதிரிட்டு நின்ற
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
கொன்றான்,Konraan - கொன்றவனும்
எதிர் வந்த,Ethir Vandha - (தன்னைக் கொல்வதாக) எதிர்த்து வந்த
புள்ளின்,Pullin - பகாஸுரனுடைய
வாய்,Vaai - வாயை
பொறுத்திட்டு,Poruthittu - (முதலிற்) பொறுத்துக் கொண்டிருந்து
கீண்டான்,Keendaan - (பின்பு) கிழித்தவனும்
நெறித்த,Neritha - நெறித்திரா நின்றுள்ள
குழல்கள்,Kuzhalgal - கூந்தல்கள்
நீங்க,Neenga - ஓடுகிற வேகத்தாலே இரண்டு பக்கமும் அலையும் படியாக
முன் ஓடி,Mun Odi - கன்றுகளுக்கு முன்னே போய்
சிறு கன்று,Siru Kanru - இளங்கன்றுகளை
மேய்ப்பாற்கு,Meipparkku - மேய்ப்பவனுமாகிய இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Devapiranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா