Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 175 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
175ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 4
ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை யெறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-4
ஒன்றே,Ondre - (பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை
உரைப்பான்,Uraippan - சொல்லுபவனும்
ஒரு சொல்லே,Oru Sollae - (மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற) ஒரு சொல்லையே
சொல்லுவான்,Solluvaan - சொல்லுபவனும்
துன்று முடியான்,Thunru Mudiyan - (நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான
துரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில்
சென்று,Sendru - தூது போய்
அங்கு,Angu - அவ்விடத்தில்
பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை
கையெறிந்தானுக்கு,Kaiyerindhaanukku - உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா,Kanrughal Meippathu Or Kol Kondu Va - இளங்கன்றுகளை மேய்ப்பவனுமாகிய இவனுக்கு ஒரு கோலை கொண்டு வா
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Nira Vannarku Or Kol Kondu Va - கடல் நிற வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா