திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 177 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
177பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 6
ஆலத் திலையான் அரவினணை மேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-6
பதவுரை Show / Hide
ஆலத்து இலையான்,Aalathu Ilaiyaan - (ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு) ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான்,Aravin Anai Melan - (எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும்
நிலம் கடலுள்,Nilam Kadalul - கரு நிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம்,Nedunkaalam - வெகு காலமாக
கண் வளர்ந்தான்,Kann Valarnthaan - யோக நித்ரை செய்பவனும்
பாலம் பிராயத்தே,Paalam Pirayathe - குழந்தைப் பருவமே தொடங்கி
பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு
அருள் செய்த,Arul Seidha - க்ருபை செய்த
கோலம்,Kolam - அழகிய வடிவத்தை யுடைய
பிரானுக்கு,Piranukku - தலைவனுமான இவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.,Kudanthai Kidanthaarkku Or Kol Kondu Va - குடந்தை கிடந்தாற்கு ஒரு கோலை கொண்டு வா