Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 179 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
179ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 8
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ
தன்னிக ரொன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-8
மின்,Min - மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை,Idai - இடையை யுடைய
சீதை பொருட்டா,Seethai Porutraa - ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்,Ilangaiyar Mannan - லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய
மணி முடி பத்தும்,Mani Mudi Paththum - ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ,Udan Veezha - ஒரு சேர அற்று விழும்படி
தன்னிகர் ஒன்று இல்லா,Thannigar Ondru Illaa - தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை,Silai - வில்லை
கால் வளைத்து இட்ட,Kaal Valaithu Itta - கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு,Minnum Mudiyarkku - விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு,Velai Adaiththaarkku - ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா