Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 180 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
180ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 9
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா–2-6-9
தென் இலங்கை,Then Ilangai - அழகிய லங்கைக்கு
மன்னன்,Mannan - அரசனாகிய ராவணனுடைய
சிரம்,Siram - தலைகளையும்
தோள்,Thol - தோள்களையும்
துணி செய்து,Thuni Seidhu - (அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு,Min Ilangu - ஒளி வீசுகின்ற
பூண்,Poon - ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு,Vibheethanan Nambikku - விபீஷணாழ்வானுக்கு
என் இலங்கு நாமத்து அளவும்,En Ilangu Naamaththu Alavum - என் பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு,Arasu - ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற,Endra - என்று அருள் செய்து
மின் இலங்கு ஆரற்கு,Min Ilangu Aararkku - மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா-;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
வேங்கடம்,Vengadam - திருமலையில்
வாணற்கு,Vaanarkku - வாழ்ந்தருளுமவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா