Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 205 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
205ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர்க் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம னென்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்
கண்டெதிரே சென் றெடுத்துக் கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே–2-9-4
கொண்டல்,Kondal - காளமேகம் போன்ற
வண்ணா,Vanna - வடிவை யுடையவனே!
இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வாராய்;
கோயில்,Kovil - திரு வரங்கத்தில் வஸிக்குமவனான
பிள்ளாய்,Pillai - பிள்ளையே!
இங்கே போதராய் ;,Inge Potharai - இங்கே வாராய்;
தென் திரை சூழ்,Then Thirai Soozh - தெளிவான அலையை யுடைய ஜலத்தால் சூழப்பட்ட
திருப்பேர்,Thiruper - திருப்பேர் நகரிலே
கிடந்த,Kidandha - பள்ளி கொண்டிரா நின்ற
திரு நாரணா,Thiru Narana - ஸ்ரீமந் நாராயணனே!
இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வாராய்;
அம்மம்,Ammam - (இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ண பிரான் வந்து) உணவை
உண்டு வந்தேன்,Undu Vanthen - (நான்) உண்டு வந்தேன்
என்று சொல்லி,Endru Solli - என்று சொல்லி
ஓடி,Odi - ஓடி வந்து
அகம் புக,Agam Puga - அகத்தினுள்ளே புகும்
ஆய்ச்சி தானும்,Aaychi Thaanum - தாயான யசோதையும்
கண்டு,Kandu - (கண்ணன் வந்த வரவையும் இவன் முக மலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து)
எதிரே சென்று,Ethire Sendru - எதிர் கொண்டு போய்
எடுத்துக் கொள்ள,Eduthuk Kolla - (அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி
கண்ண பிரான்,Kanna Piraan - (அந்த) ஸ்ரீகிருஷ்ணன்
கற்ற,Katra - (தானாகவே) கற்றுக் கொண்ட
கல்வி தானே,Kalvi Thaane - கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே! (என்று ஆழ்வார் இனியராகிறார்)