| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 207 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய் ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மட்டேன் கோதுகலமுடைக் குட்டனேயா குன்றெடுத்தாய் குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே–2-9-6 | கோதுகலம் உடை,Kothukalam Udai - (எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன் மேல்) உடைய ஓ குட்டனே,O Kuttane - வாராய் பிள்ளாய்! குன்று,Kundru - (கோவர்த்தனம் என்னும்) மலையை எடுத்தாய்,Eduththai - (குடையாக) எடுத்தவனே! குடம் ஆடு கூத்தா,Kudam Aadu Kooththa - குடக் கூத்தாடினவனே! வேதம்,Vedam - வேதங்களுக்கு பொருளே,Porule - பொருளாயிருப்பவனே! என் வேங்கடவா,En Vengadavaa - ‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே! வித்தகனே,Viththagane - வியக்கத் தக்கவனே! (நீ) இங்கே,Inge - என்னருகில் போதர் கண்டாய் போதர் கண்டாய்,Pothar Kandai Pothar Kandai - விரைந்து ஓடிவா; போதரேன் என்னாதே,Potharen Ennaathe - (என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன; )‘வர மாட்டேன்’ என்று சொல்லாமல் போதர் கண்டாய்,Pothar Kandai - (இசைந்து) வருவாயாக; அசல் அகத்தார்,Asal Agaththar - (என்று யசோதை வேண்டி யழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தி யழைப்பது ஏதுக்காக?’ என்ன ) அசல் வீட்டுக் காரர்கள் ஏதேனும்,Ethenum - இன்னது என்று எடுத்துக் கூற ஒண்ணா படியுள்ள சில கடுஞ்சொற்களை சொல்லி,Solli - (உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக் கொண்டு ஏதேனும்,Ethenum - (அவ்வளவோடும் நில்லாமல்) (என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை பேச,Pesa - (என் பக்கலிலே வந்து) சொல்ல நான்,Naan - (அவற்றை) (உன் மீது பரிவுள்ள) நான் கேட்க மாட்டேன்,Ketka Matten - கேட்டுப் பொறுக்க மாட்டேன் இங்கே போதராய்,Enge Potharai - (ஆதலால், அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.) |