திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 209 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
209பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
கேசவனே இங்கே போதராயே கில்லே னென்னாது இங்கே போதராயே நேச மிலாதா ரகத்திருந்து நீ விளையாடாதே போதராயே தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே–2-9-8
பதவுரை Show / Hide
கேசவனே,Kesavane - அழகிய குழலை யுடையவனே!
இங்கே போதராய்,Inge Potharai - இங்கே வருவாயாக;
கில்லேன் என்னாது,Killeen Ennadhu - ‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல்
இங்கே போதராய்;,Inge Potharai - இங்கே வருவாயாக, என்று யசோதை யழைக்க (இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,)
நீ,Nee - நீ
நேசம் இலாதார்,Nesam Ilaathaar - (உன்மீது) அன்பில்லாதவர்களுடைய
அகத்து இருந்து,Agaththu Irundhu - அகங்களிலே யிருந்து
விளையாடாதே,Vilayaadaadhe - விளையாட்டொழிவது மன்றி,
தூசனம் சொல்லும்,Thooshanam Sollum - (உன் மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற
தொழுத்தைமாரும்,Thozhuththaimarum - (இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்
தொண்டரும்,Thondarum - (இடையர்க்கு) அடியரானவர்களும்
நின்ற,Nindra - நிற்கின்ற
இடத்தில் நின்று,Idaththil Nindru - இடங்களையு மொழித்து விட்டு
போதராய்,Potharai - (இங்கே) வாராய்;
தாய் சொல்லு,Thaai Sollu - (என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,) தாய் வாய்ச் சொல்லை
கொள்வது,Kolvadhu - மேற் கொண்டு நடப்பது
தன்மம் கண்டாய்,Thanmam Kandai - (பிள்ளைகளுக்கு) தர்மங்காண்;
தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.),Thaamodharaa Inge Potharai - (ஆதலால்) தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.)