திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2092 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வ ரஷகனானவனை ஒழிய நான் மற்று எங்கேனும் போகிலும் -என்னுடைய இந்த்ரியங்கள் ஆனவை அவனை ஒழிய வேறு சிலரை ஸ்தோத்ரம் பண்ணாது -என்கிறார் அவன் ஜகத் ரஷணத்தில் நின்றும் மீளாதாப் போலே இவருடைய இந்த்ரியங்களும் அவனை விட்டு மீளா – அல்லாதார்க்கு அவன் பக்கலிலே இந்த்ரியங்களை மூட்டுகைக்கு உள்ள அருமை போரும் இவர்க்கு அகற்றுகைக்கு 11 | வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி | பதவுரை Show / Hideவாய், Vaai - எனது வாயானது அவனை அல்லது, அவனை அல்லது - ஸர்வேச்வரனைத் தவிர வாழ்த்தாது, வாழ்த்தாது - (மற்றொன்றைப்) புகழாது; கை தாம், கை தாம் - கைகளானவை உலகம் தாயவனை அல்லது தொழா, உலகம் தாயவனை அல்லது தொழா - உலகங்களைத்தாவியளந்துகொண்ட திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழமாட்டா; பேய் முலை நஞ்சு, பேய் முலை நஞ்சு - பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை ஊண் ஆக, ஊண் ஆக - உணவாக உண்டான், உண்டான் - அமுது செய்த கண்ண பிரானுடைய உருவொடு பேர் அல்லால், உருவொடு பேர் அல்லால் - திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்) கண் கணா செவி கேளா, கண் கணா செவி கேளா - கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்கமாட்டா. |