திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2093 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2093முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே சர்வ சமாஸ்ரயணீயன் அவனே என்றார் – இங்கு ஆஸ்ரயணீயத்துக்கு அநுரூபமான சாதனம் இன்னது என்று பக்தியை விதிக்கிறார் 12
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே ஏனமாய் நின்றார்க்கு இயல்வு
பதவுரை Show / Hide
ஏனம் ஆய் நின்றாற்கு, ஏனம் ஆய் நின்றாற்கு - வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும், செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் - (இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,) செவிதொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும், செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் - தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும், அவியாத ஞானமும் - (இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும், வேள்வியும் - அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும், நல் அறமும் - (நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்
இயல்வு என்பரே, இயல்வு என்பரே - ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)