திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2094 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -என்னும் படியாய் இருந்தது உம்மது அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது அவதானம் வேணும் எங்கனே கூடுமோ என்னில் ப்ரக்ருத்யா ஆஸ்ரயித்து இருக்கிறவர்கள் நித்ய ஸூரிகள் அல்லாதாரும் யதா சக்தி ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாகத் தானே பிரதம பாவியாம் – என்கிறது 13 | இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் | பதவுரை Show / Hideஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக, ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக முன்னம், Munnam - அநாதிகாலமாக முயல்வார், முயல்வார் - முயற்சி செய்பவர்கள் இயல் அமரர், இயல் அமரர் - (யாரென்றால்) யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளேயாவர்; இயல்வு ஆக, இயல்வு ஆக - (நம்போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி) பொருத்தமாக நீதியால் ஓதி, நீதியால் ஓதி - முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து நியமங்களால் பரவ, நியமங்களால் பரவ - (அந்தவேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு அவர், அவர் - அந்த எம்பெருமான் ஆதி ஆய் நின்றார், ஆதி ஆய் நின்றார் - முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார். |