திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2096 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் – நாட்டிலே சிலரைச் சிலர் ஆஸ்ரயிக்கையும் அவர்கள் அவர்களுக்குப் பல பிரதானம் பண்ணுகையுமாய் அன்றோ இருக்கிறது -என்ன அவர்கள் அங்கனே செய்தார்களே யாகிலும் அவை யடங்க வ்யர்த்தம் -என்கிறா 15 | முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது | பதவுரை Show / Hideமூவரே, மூவரே - (உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்) ஸ்ருஷ்டிஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே முதல் ஆவார், முதல் ஆவார் - முக்கியரான தேவர்களாவார்; அம்மூவர் உள்ளும், அம்மூவர் உள்ளும் - அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே மூரி நீர் வண்ணன், மூரி நீர் வண்ணன் - கடல் வண்ணனாகிய திருமாலே முதல் ஆவான், முதல் ஆவான் - தலைவனாயிருப்பவன்; முதல் ஆய, முதல் ஆய - உலகுக்கெல்லாம் காரண பூதனும் நல்லான், நல்லான் - நற்குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய அருள் அல்லால், அருள் அல்லால் - கிருபையானது நன்மையை விளைக்குமேயொழிய நாமம்நீர் வையகத்து, நாமம்நீர் வையகத்து - கடல்சூழ்ந்த இப்பூமியில் பல்லார், பல்லார் - அத்திருமால் தவிர மற்றும் பலருடைய அருளும், அருளும் - தயையும் பழுது, பழுது - பயனற்றதாம் |