திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 21 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
21பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (பருவத்துக்குத் தக்க அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து – திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை – அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார்) 9
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கி லாமையால் நான் மெலிந் தேன் நங்காய்–1-1-9
பதவுரை Show / Hide
நங்காய்,Nangai - பூர்ணகளான ஸ்த்ரீகளே (இப்பிள்ளையானவன்)
கிடக்கில்,Kidakkil - (தொட்டிலில்) கிடந்தானாகில்
தொட்டில்,Thottil - தொட்டிலானது
கிழிய,Kizhiya - சிதிலமாம்படி
உதைத்திடும்,Udhaithidum - (கால்களினால்) உதையா நின்றான்
எடுத்துக் கொள்ளில்,Eduththu kollil - (இவனை இடுப்பில்) எடுத்துக் கொண்டால்
மருங்கை,Marungai - இடுப்பை
இறுத்திடும்,Eruthidum - முறியா நின்றான்.
ஒடுக்கி,Oduki - (இவனுடைய கைகால்களை) ஒடுக்கி
புல்கில்,Pulgil - மார்வில் அணைத்துக் கொண்டால்
உதரத்து,Udharaththu - வயிற்றிலே
பாய்ந்திடும்,Paayndhidum - பாயாநின்றான்
மிடுக்கு,Midukku - (இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல) சக்தி
இலாமையால்,Ilaamaiyaal - (இப்பிள்ளைக்கு) இல்லாமையால்
நான்,Naan - தாயாகிய நான்
மெலிந்தேன்,Melindhen - மிகவும் இளைத்தேன்.