திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2103 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2103முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நம்மை ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனாகச் சொன்னீர் அது நாம் அறிகிறிலோம் நீர் அறிந்த படி என் -என்ன நீ என் வாயைப் புதைத்தாலும் -நாட்டார் வாயைப் புதைக்கலாமோ -என்கிறார் 22
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் பொறி கொள் சிறை யவண மூர்த்தாயை வெறி கமழும் காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத் தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு
பதவுரை Show / Hide
பொறிகொள் சிறை, பொறிகொள் சிறை - பலநிறங்களையுங்கொண்ட சிறகுகளையுடைய
உவணம், உவணம் - கருடாழ்வானை
ஊர்ந்தாய், ஊர்ந்தாய் - ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி, காம்பு ஏய் மென் தோளி - மூங்கிலையொத்த மெல்லிய தோள்களையுடைய யசோதையினாலே
கடை, Kadai - கடையப்பட்டு
வெறி கமழும், வெறி கமழும் - பரிமளம் வீசப்பெற்ற
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
உண்டாயை, உண்டாயை - (களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பேகொண்டு, தாம்பேகொண்டு - (கையில் கிடைத்ததொரு) தாம்பைகொண்டு
ஆர்த்த, ஆர்த்த - கட்டியதனா லுண்டான
தழும்ப, தழும்ப - காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன், யானேயும் அல்லேன் - நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும், உலகு எல்லாம் அறியும் - உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.