திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2109 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2109முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அந்நிலை தன்னிலே ஐஸ்வர்யம் தோற்றும்படி இரா நின்றது என்னுதல்- அன்றிக்கே – பெரிய அழகு அடங்கலும் தோற்றும்படியாய் இரா நின்றது என்னுதல் – அன்றிக்கே நீர்மையைச் சொல்லிற்று ஆதல் 28
கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத் தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை
பதவுரை Show / Hide
கார் வண்ணத்து ஐய, கார் வண்ணத்து ஐய - மேகம்போன்ற வடிவையுடைய பெருமானே
வலம்புரியும், வலம்புரியும் - வலம்புரிச்சங்கமும்
நேமியும், நேமியும் - சக்கரமும்
கைய, Kaiya - என் கையிலுள்ளன;
மலர் மகள், Malar Magal - பெரியபிராட்டியார்
நின் ஆகத்தால், நின் ஆகத்தால் - உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான், செய்ய மறையான் - சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான், நின் உந்தியான் - உனது உந்திக்கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான், மா மதிள் மூன்று எய்த இறையான் - பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை, நின் ஆகத்து இறை - உனது திருமேனியின் ஏகதேசம்