திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2111 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சம்சாரத்தில் சமாஸ்ரயணீயர் பலர் உண்டு என்று பிரமிக்க வேண்டா சம்பந்த ஜ்ஞானம் உண்டாக நெஞ்சு தானே அவனை யாராய்ந்து பற்றும் கண் அழிவற்ற பக்தியை யுடையாருக்கு அவன் தானே வந்து கிட்டும் அளவும் க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் 30 | தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து | பதவுரை Show / Hideஉள்ளத்தை, உள்ளத்தை - மனத்தை தெளிது ஆக, தெளிது ஆக - [ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி செம் நிறீஇ, செம் நிறீஇ - செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தைமூட்டி] ஞானம், ஞானம் - பகவத்விஷய பக்தியாலே தெளிது ஆக, தெளிது ஆக - ‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி நன்கு, நன்கு - நன்றாக உணர்வார், உணர்வார் - அறிபவர்களுடைய சிந்தை, Sindhai - மனமானது. எளிது ஆக-, எளிது ஆக- - வருத்தமில்லாமல் தாய்நாடு கன்றேபோல், தாய்நாடு கன்றேபோல் - [பெரிய பசுக்கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற கன்றைப்போல, தண் துழாயான் அடிக்கே, தண் துழாயான் அடிக்கே - குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்த எம்பெருமானது திருவடிகளையே புரிந்து, Purindhu - விரும்பி போய் நாடிக்கொள்ளும், போய் நாடிக்கொள்ளும் - தானே சென்று தேடிச்சேரும். |