திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2114 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிறவனை உள்ளீடாகக் கொள்ளாதே நாட்டார் ஓதுவது உரு எண்ணுவதாய்க் கொண்டு செய்யா நிற்கிற சந்த்யாதி கர்மங்களாலே ஒரு பிரயோஜனம் இல்லை கிடீர் என்கிறார் 33 | நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் | பதவுரை Show / Hideபூமேல், பூமேல் - திருநாபிக் கமலத்திலே நான்முகற்கு, நான்முகற்கு - பிரமனுக்கு நகரம் அருள் புரிந்து, நகரம் அருள் புரிந்து - இருப்பிடத்தை ஏற்படுத்தியருளியும் பகர, பகர - (யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக மறை, Marai - வேதத்தை பயந்த, பயந்த - உபகரித்தும்வைத்த பண்பன், பண்பன் - குணசாலியான எம் பெருமானுடைய பெயரினை, பெயரினை - திருநாமங்களை பிந்தியால், பிந்தியால் - மனத்தினால் சிந்தியாது, சிந்தியாது - எண்ணாமல் ஓதி உரு எண்ணும், ஓதி உரு எண்ணும் - ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால் அங்கு ஆம் பயன் என், அங்கு ஆம் பயன் என் - உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.) |