திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2119 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் தேசத்தை உகந்த படியைக் கண்டு இவரும் அங்கு உள்ள பதார்த்தங்களை உகக்கப் புக்கார் – ஒரு தேசம் ப்ராப்யம் என்று பிரதிபத்தி பிறந்த பின்னை அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் இருக்கக் கடவது இறே – பரம பதத்தில் உள்ளார் அடைய உத்தேச்யர் ஆமா போலே- 38 | ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை, – காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
என்னென்ற மால திடம். | பதவுரை Show / Hideஊரும், Oorum - திரிகின்ற வரி அரவம், Vari Aravam - (உடம்பில்) கோடுகளையுடைய ஸர்ப்பமானது, ஒண் குறவர், On Kuravar - அழகிய குறவர்கள் மால் யானை பேர, Maal Yaanai Pera - (பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக எறிந்த, Erintha - (அவ்யானைகளின்மேல்) வீசியெறிந்த பெரு மணியை, Peru Maniyai - பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு) கார் உடைய மின் என்று, Kaar Udaya Min Endru - மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி) புற்று அடையும் வேங்கடம், Putru Adayum Vengadam - புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை, மேல சுரர், Mela Surar - மேற்பட்டவர்களான நித்யஸூரிகள் எம் என்னும் மாலது, Em Ennum Maalathu - ‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும்படியாகவுள்ள எம்பெருமானது இடம், Idam - திவ்யதேசமாம். |