| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 212 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11 | வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன் பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல் கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11 | வண்டு,Vandu - வண்டுகளானவை களித்து,Kaliththu - (தேனைப் பருகிக்) களித்து இரைக்கும்,Eraikkum - ஆரவாரங்கள் செய்யப் பெற்ற பொழில்,Pozhil - சோலைகளாலும் வரு,Varu - (அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள புனல்,Punal - நீரை யுடைத்தான காவிரி,Kaaviri - காவேரீ நதியான சூழ்,Soozh - சூழப் பெற்று தென்,Then - அழகிய அரங்கன் அவன்,Arangan Avan - திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான் பண்டு,Pandu - (விபவமாகிய) முற் காலத்தில் செய்த,Seidha - செய்த கிரீடை எல்லாம்,Kireedai Ellaam - லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு) விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்,Vittu Siththan Pattarpiraan Paadal - விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய இவை கொண்டு,Ivai Kondu - இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு பாடி,Paadi - (இப் பாசுரங்களை)பாடி குனிக்க வல்லார்,Kunikka Vallaar - (அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து) கூத்தாட வல்லவர்களாய் கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி,Govindhan Than Adiyaargal Aagi - கண்ண பிரானுக்கு அடியவர்களாய் என் திசைக்கும்,En Disaiyukkum - எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி) விளக்கு ஆகி நிற்பார்,Vilakku Aagi Nrirpaar - (அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய இணை யடி,Inai Yadi - திருவடிவிணை களானவை என் தலை மேலான,En Thalai Melaana - என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை |