திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2121 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இங்குற்றை நித்ய வாசம் தனக்கு அவன் பிரயோஜனமாக நினைத்து இருப்பது ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி யுகக்குமத்தை கிடீர் – என்கிறார் – 40 | பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று. | பதவுரை Show / Hideபெருவில், Peruvil - பெரிய வில்லையும் பகழி, Pagazhi - அம்புகளை முடையரான குறவர், Kuravar - குறவர்களினுடைய கை, Kai - கையிற்பிடித்திருந்த செம் தீ, Sem Thee - சிவந்த நெருப்புக்கு வெருவி, Veruvi - பயப்பட்டு புனம் துறந்த, Punam Thurandha - கொல்லையை விட்டு நீங்கின வேழம், Vezham - யானையானது, இரு விசிம்பில், Iru Visimbil - பரந்த ஆகாசத்தில் நின்றும் மீன் வீழ, Meen Veezha - நக்ஷத்திரம் விழ கண்டு, Kandu - அதனைப்பார்த்து (நாம் அப்பால் போகமுடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து) அஞ்சும், Anjum - பயப்படுமிடமான வேங்கடம், Vengadam - திருவேங்கடமானது மேல், Mel - முன்பொருகால் அசுரர் கோன் வீழ கண்டு, Asurar Kon Veezha Kandu - இரணியாசுரனை முடித்து உகந்தான், Uganthaan - ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய குன்று, Kunru - திருமலையாம் |