திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2123 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிக் குற்றம் பொறுக்க வேண்டுகிற ஹேது என் என்னில் அங்கே பிராட்டிமார் நித்ய வாசம் பண்ணுகையாலே -என்கிறார் குற்றத்தைப் பொறுப்பித்து குணத்தை குவாலாக்குவார்கள் – அவள் -பாபா நாம் வா ஸூ பா நாம் வா -யுத்த -116-44-என்றால் இவன் -தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் -யுத்த -18-3-என்னத் தட்டு உண்டோ – 42 | திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், – திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்? | பதவுரை Show / Hideபால் ஓதம் சிந்த, Paal Odam Sindha - திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்துஸுகப்படுத்த, படம் நாக அனை கிடந்த, Padam Naaga Anaikidandha - படமெடுத்த பாம்பினணையிற் பள்ளிகொண்ட மால் ஓதம் வண்ணர், Maal Odam Vannaar - பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது திரு மகள் மேல் மனம், Thiru Magal Mel Manam - பெரிய பிராட்டியார்மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது. திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால், Thirumagalum Manmagalum Aaymagalum Serndhaal - ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது திருமகட்கே தீர்ந்த ஆறு என்கொல், Thirumagathke Theerndha Aaru Enkol - பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத்தீர்ந்திருக்கிற விதம் என்னோ? |