திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2126 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிறவனுடைய நீர்மை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிலம் அன்று கிடீர் என்கிறார் – 45 | ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, – பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
பாதமத்தா லேண்ணினான் பண்பு. | பதவுரை Show / Hideநல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே! பூ மேய மாதவத் தோன் தாள்பணிந்த, Poo Maeya Maadhavath Thon Thaalpanindha - திருநாபிக் கமலத்திற்பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆச்ரயித்த வாள் அரக்கன், Vaal Arakkan - கொடிய இராவணனுடைய நீள் முடியை, Neel Mudiyai - நீண்ட பத்துத்தலைகளையும் பாதம் அத்தால் எண்ணினான் பண்பு, Paadham Aththal Enninraan Panbu - அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக்காட்டின எம்பெருமானுடைய குணம். அமரர்க்கு அறிய ஆமே, Amararukku Ariya Aame - பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ? அது நிற்க, Adhu Nirka - அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்; நாமே அறிகிற்போம், Naam E Ariyikirpom - (எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம். |