திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2129 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2129முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நெஞ்சே -நமக்கு இத் தேவைகள் எல்லாம் வேண்டா கிடாய் அவன் தானே தாம் இருந்த விடத்தே தன்னைக் கொடு வந்து தரும் ஸ்வ பாவனாய் இருந்தான் ஆன பின்பு நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார் கிடாய் என்கிறார் – 48
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல், சுழலும் சுராசுரர்க ளஞ்ச, – அழலும் செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல, மருவாழி நெஞ்சே மகிழ்.
பதவுரை Show / Hide
ஆழி நெஞ்சே, Aazhi Nenje - கம்பீரமான மனமே!
ஒரு கழல், Oru Kazhal - [முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்] ஒரு திருவடியை
எடுத்து, Eduthu - மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை, Oru Kai - ஒரு திருக்கையாலே
சுற்றி, Sutri - [பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றியெறிந்து
ஓர் கை மேல், Oru Kai Mel - மற்றொரு திருக்கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்செரு ஆழி ஏந்தினான், Suzhalum Surasurargal Anja Azhalumcheru Aazhi Aendinaan - இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற [அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்] அழலையுமிழ்கிற யுத்தசாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல, Sae Adikke Sella - திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு, Maruvu - பொருந்துவாயாக;
மகிழ், Magizh - இதை ஆனந்தரூபமாக ஏற்றுக்கொள்.