திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 213 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
213பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 1
ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை சேற்றா லெறிந்து வளை துகில் கைக் கொண்டு காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்–2-10-1
பதவுரை Show / Hide
ஆற்றில் இருந்து,Aatril Irundhu - யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு
விளையாடுவோங்களை,Vilaiyaaduvongalai - விளையாட நின்ற எங்கள் மேல்
சேற்றால் எறிந்து,Saetral Erindhu - சேற்றை விட்டெறிந்து
வளை,Valai - எங்களுடைய கை வளைகளையும்
துகில்,Thugil - புடவைகளையும்
கைக் கொண்டு,Kaik Kondu - (தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு
காற்றில்,Kaatril - காற்றிலுங் காட்டில்
கடியன் ஆய்,Kadian Aai - மிக்க வேகமுடையவனாய்
ஓடி,Odi - (அங்கு நின்றும்) ஓடி வந்து
அகம் புக்கு,Agam Pukku - (தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு
மாற்றமும்,Maatramum - (வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து) ஒரு வாய்ச் சொல்லும்
தாரானாய்,Tharaanaai - அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால்
இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
வளைத் திறம்,Valai Thiram - (தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக
பேசானால்,Paesaanal - (தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால்
இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;