திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2130 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) எல்லாம் செய்தாலும் இவ்வருகு உண்டான பிரகிருதி பிராக்ருதங்களில் விரக்தி பிறந்து அவனை ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது ஒரு படி கண்டதாய்த் தலைக் கட்ட முடியாது என்கிறார் – 49 | மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், – முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்
ஆதிகாண் பார்க்கு மரிது. | பதவுரை Show / Hideமகிழ் அலகு ஒன்றே போல், Magizh Alagu Ondre Pol - (கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே காணிஸ்தாநத்திலும் கோடிஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பதுபோல மாறும் பல் யாக்கை, Maarum Pal Yaakkai - மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள் நெகிழ, Negizhal - தன்னடையேவிட்டு நீங்கும்படியாக முயலகிற்பார்க்கு அல்லால், Muyalakirparkku Allaal - முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர ஆர்க்கும், Aarkkum - மற்ற எவர்க்கும் முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி எம் ஆதி காண்பு, Mugizh Virindha Sothipol Thondrum Sudar Pon Nedumudi Em Aadhi Kaanbu - விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல் தோன்றுகிற தேஜஸ்ஸையுடைய அழகிய பெரிய திருவபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது அரிது, Aridhu - கூடாதகாரியம். |