திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2131 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2131முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே சிநேக யுக்தராய்க் கொண்டு அவனைக் காண்கை சால எளிது என்கிறார் – 50
அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம் பரியப் பரிசினால் புல்கில், – பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர் ஏற்றானைக் காண்ப தெளிது.
பதவுரை Show / Hide
அரிய, Ariya - அடக்கமுடியாத
புலன் ஐந்து, Pulan Aindhu - பஞ்சேந்திருயங்களையும்
அடக்கி, Adakki - கட்டுப்படுத்தி,
ஆய், Aai - ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர், Malar - புஷ்பங்களை
கொண்டு, Kondhu - கையில் ஏந்திகொண்டு
ஆர்வம் புரிய பரிசினால், Aarvam Puriya Parisinaal - அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில், Pulkil - கிட்டப்பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால், Periyan Aai Maatrathu Veetrirundha Maavali Paal - ‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தையுடையனாய் தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலியிடத்தில்
வண்கை, Vankai - உதாரமான தனது திருக்கையாலே
நீர் ஏற்றானை, Neer Aetranai - உதகதாநம் வாங்கின பெருமானை
காண்பது, Kaanbathu - ஸேவிப்பது
எளிது, Elidhu - ஸுலபமாகும்.