திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2132 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நெஞ்சே – அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நமக்கு இனிதாக நாம் இவ்வாயாலே திரு நாமத்தைச் சொல்லவே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் விரோதியைப் போக்கித் தன்னை அவனுக்குக் கொடுத்தாப் போலே நம் விரோதியையையும் போக்கி நமக்குத் தன்னைக் கொடு வந்து தரும் கிடாய் என்கிறார் – 51 | எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில்
பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண். | பதவுரை Show / Hideஎன் உள்ளம், En Ullam - எனது நெஞ்சே!(நீ) தெளிய, Theliya - கலக்கம் தீர்ந்து தெளிவுபெற்றால் செவ்வே தெளிந்தொழியும், Sevve Thelinthozhiyum - (அந்த எம்பெருமானும்) மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்; களியில், Kalil - (ஆகையினால்) அஹங்காரத்தாலே பொருந்தாதவனை, Porundhaadhavanai - அடிபணியாதிருந்த ஹிரண்யாஸீரனோடு பொரல் உற்று, Poral Utrru - போர்செய்யத் தொடங்கி அரி ஆய் இருந்தான், Ari Aai Irundhaan - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய திரு நாமம், Thiru Naamam - திருநாமங்களை, இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு, Irandu Adiyum Elidil Kaanbatharku - (அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு எண், Enn - சிந்திப்பாயாக. |