திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2134 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கார்ய காலத்திலே வந்து – பிரயோஜனங்களைக் கொண்டு போகை யன்றிக்கே – கைங்கர்யமே ஸ்வ பாவமாக உடையராய் இருக்குமவர்கள் அவன் பக்கல் பரிமாறும்படி சொல்லுகிறது – எல்லா நேர்த்தியும் நேர்ந்து – தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று கீழ் இதில் தங்களை எல்லாம் அழிய மாறியும் அங்குத்தைக்கு உறுப்பாம் அவர்களைச் சொல்லுகிறது – 53 | சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு. | பதவுரை Show / Hideதிரு மாற்கு, Thiru Maarku - பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு அரவு, Aravu - திருவனந்தாழ்வான், சென்றால் குடை ஆம், Sendraal Kudai Aam - (அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்; இருந்தால், Irundhaal - எழுந்தருளியிருந்தால் சிங்காசனம் ஆம், Singaasanam Aam - (அப்போது) ஸிம்ஹாஸாமாயிருப்பன்; நின்றால், Nindraal - நின்று கொண்டிருந்தால் மரவடி ஆம், Maravadi Aam - (அப்போது) பாதுகையாவன்; நீள் கடலுள், Neel Kadalul - பாம்பினையுடலிலே (சயனிக்கும்போது) என்றும், Endrum - எப்போதும் புணை ஆம், Punar Aam - திருப்பள்ளி மெத்தையாவன்; அணி விளக்கு ஆம், Ani Vilakku Aam - மங்கள தீபமாவன்; பும்பட்டு ஆம், Pumbattu Aam - அழகிய திருப்பரி வட்டமாவன்; புல்கும் அணை ஆம், Pulgum Anai Aam - தழுவிக்கொள்வதற்கு உரிய அணையுமாவன். |