திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2141 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒருவன் பல போக்தாவாய் இருக்க ஒருவன் சாதனமாக வேண்டுகிற ஹேது என் என்னில் – அறியுமவன் செய்யும் அத்தனை போக்கி அறியாதவனால் செய்யலாவது உண்டோ என்கிறார் – சேதனர் கீழே போய்த்தும் தாங்கள் படுகிறதும் மேல் வரக் கடவதும் அறியார்கள் சர்வேஸ்வரன் பழகியான் தானே பணிமின் -நான் முகன் திரு -22-என்று இவர்கள் கீழ்ப் பட்டதும் இப்போது படுகிறதும் மேல் படக் கடவதும் எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே அவனே உபாயமாம் இத்தனை இறே – 60 | சரணா மறைபயந்த தாமரையா னோடு,
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,
ஓராழி சூழ்ந்த வுலகு. | பதவுரை Show / Hideசரண் ஆம் மறை, Saran Aam Marai - (எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை பயந்த, Payandha - (எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின தாமரையானோடு, Thamaraiyanodu - பிரமனோடுகூட மரண் ஆய, Maran Aaya - மரணமடையுந் தன்மையுடைய மன் உயிர்கட்கு எல்லாம், Man Uyirkadku Ellam - நித்யமான ஸ்வரூபத்தையுடைய ஆத்மாக்களெல்லாவற்றுக்கும் அரண் ஆய, Aran Aaya - ரக்ஷகமான விதங்களை பேர் ஆழி கொண்டபிராண் அன்றி, Per Aazhi Kondapiran Andri - பெரிய திருவாழியாழ்வானைக் கையிற்கொண்ட எம்பெருமான் அறிவனேயல்லது மற்று, Mattru - அவனிலும் வேறான ஓர் ஆழி சூழ்ந்த உலகு, Oru Aazhi Soozhntha Ulaku - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார். அறியாது, Ariyadhu - அறிமாட்டார்கள். |