திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2142 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக இவனை ஒழிய இவை தம்தாமுக்கு ஹிதம் அறியா -என்றது கீழ் இதில் அவனே அறிந்து இவற்றை நோக்க வேண்டுகிற ஹேது என் என்னில் பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் – ஹிதம் அறியாமையே அல்ல தம்தாமுடைய உத்பத்தியும் அறியார்கள் என்கிறது – 61 | உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும், – உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு. | பதவுரை Show / Hideஉலகும், Ulagum - பூமி முதலிய லோகங்களும் உலகு இறந்த ஊழியும், Ulaku Irandha Oozhiyum - இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும் ஒண் கேழ் விலகு, On Kizh Vilagu - அழகிய நிறத்தோடு அலையெறிகிற கரு கடலும், Karukadalum - கருநிறத்ததான ஸமுத்ரமும் வெற்பும், Verpum - மலைகளும். உலகினில் செம் தீயும், Ulakinil Sem Theeyum - இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும் மாருதமும், Maruthamum - காற்றும் வானும், Vaanum - ஆகாயமும் திருமால் தன், Thirumaal Than - (ஆகிய இவையாவும்) லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய புந்தியில், Pundhiyil - ஸங்கல்ப ஞானத்திலால் ஆய, Aaya - படைக்கப்பட்ட புணர்ப்பு, Punarppu - படைப்புக்களாம். |