திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2145 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நயவேன் நள்ளேன் என்று இங்கனே துணியலாமோ எல்லாம் செய்தாலும் அவை வந்து மேலிடில் செய்வது என் என்னில் நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து என்னை மேலிடும்படி என்கிறார் – 1-ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கையும் 2-அபாகவத ஜனங்களோட்டை சஹ வாசம் பண்ணுகையும் 3-பாகவதர்களோடு சஹ வாசம் அற்று இருக்கையும் 4-ஈஸ்வரன் பக்கல் பிரதிபத்தியில் குறைந்து இருக்கையும் 5-புருஷகாரத்தில் அத்யவசாயக் குறை யுண்டாகையும் இவை இறே தான் வினை வருகைக்கு அடி அவை பின்னை எனக்கு உண்டோ – என்கிறார் – 64 | நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை? | பதவுரை Show / Hideபிறர் பொருளை, Piraar Porulai - பரமபுருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை நயவேன், Nayaveen - (என்னுடையதென்று) விரும்பமாட்டேன்; கீழாரோடு, Keelaarodu - ஸம்ஸாரிகளோடு நள்ளேன், Nalleen - ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்; உயர்ந்தவரோடு அல்லால், Uyarnthavarodu Allal - சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு) உயவேன், Uyaveen - காலக்ஷேபம் பண்ணமாட்டேன். திருமாலை அல்லது, Thirumalai Alladhu - எம்பெருமானையன்றி (தேவதாந்தரங்களை) தெய்வம் என்று ஏத்தேன், Deivam Endru Aeththen - தெய்வமாகக் கொண்டு துதிக்கமாட்டேன்; வியவேன், Viyaveen - (இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வகுணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்; என் மேல், En Mel - (இப்படியான அறிமாட்டார்கள். பின்பு) எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என்மேலே வினை, Vinai - அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம் வரும் ஆறு என், Varum Aaru En - வரும்விதம் ஏது? [வரமாட்டாது] |