திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2146 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2146முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இது எனக்கு ஒருவனுக்குமே யன்று – அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் கிடீர் என்கிறார்  – 65
வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார், தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற் கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட் கரியானைக் கைதொழுதக் கால்.
பதவுரை Show / Hide
நினைதற்கு அரியானை, Ninaitharku Ariyanai - (ஸ்வப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை, Seyaanai - (நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர், Aayiram Per - ஆயிரம் திருநாமங்களையுடையவனும்
செம் கண் கரியானை, Sem Kan Kariyanai - சிவந்த திருக்கண்களையும் கறுத்த வடிவையுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால், Kai Thozhudakkal - அஞ்சலி பண்ணினால்
வினையால், Vinaiyal - (அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்) நல்வினை தீவினைகளால்
அடர்ப்படார், Adarppadar - நெருக்குபடமாட்டார்கள்;
வெம் நரகில், Vem Narakil - கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார், Searar - (மீண்டும்) சென்று கிட்டமாட்டார்கள்;
தினையேனும், Dinaeyenum - சிறிதளவும்
தீ கதிக்கண், Thee Kathikkan - கெட்டவழிகளில்
செல்லார், Sellar - போகமாட்டார்கள்.