திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2147 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவுடையராய் இருப்பார்கள் ஆகில் பஜநீயன் அவனே கிடீர் என்கிறார் – 66 | காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
பேராழி கொண்டான் பெயர். | பதவுரை Show / Hideஉலகம், Ulagam - உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள் காலை எழுந்து, Kaalaik Ezhunthu - (ஸத்வகுணம் வளரக் கூடிய ) விடியற்காலையில் துயில் விட்டெழிந்து கற்பனவும், Karppanavum - அப்யஸிப்பனவும், கற்று உணர்ந்த மேலை தலைமறையோர், Kattru Unarntha Melai Thalaimaraivor - படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள் வேட்பனவும், Vedpanavum - ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும். வேலைக்கண் ஓர் ஆழியான், Velaikkan Oru Azhiyan - (எவையென்றால்) திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியையுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய அடியே, Adiye - திருவடிகளேயாம்; ஓதுவதும், Othuvathum - மஹான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும் ஓர்ப்பனவும், Orppanavum - மநநம் பண்ணப் பெறுவனவும் பேர் ஆழி கொண்டான், Per Aazhi Kondaaan - பெரிய கடல்போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய பெயர், Peyar - திருநாமங்களேயாம். |