திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2148 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) மோஷ இச்சை யுடையவர்களும் அறிவு தலை நின்றவர்களும் அவனுடைய திருவடிகளையே ஏத்துவது திரு நாமங்களை ஓதுவது என்று சொல்லிற்று -கீழே – இந்த நிர்பந்தம் வேண்டுவான் என் என்னில் நாம் தான் அறிவுடையாரை இ றே சொல்லிற்று அந்த அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீயபதி யல்லது இல்லாமையாலே என்கிறார் – 67 | பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,
ஒருவனையே நோக்கும் உணர்வு. | பதவுரை Show / Hideஆறு, Aaru - ஆறுகளானவை பெயரும் கரு கடலே நோக்கும், Peyarum Karu Kadalai Nokkum - பொங்கி கிளர்கின்ற மஹாஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்; ஒண் பூ, On Poo - அழகிய தாமரைப் பூவானது உயரும், Uyirum - உந்ததஸ்தநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற கதிரவனே, Kadhiravane - ஸூர்யனையே நோக்கும், Nokkum - கண்டுமலரும்; உயிரும், Uyirum - பிராணனும் தருமனையே நோக்கும், Tharumanaiye Nokkum - யமதர்மராஜனையே சென்று சேரும்; உணர்வு, Unarvu - [இவை போலவே] ஞானமானது ஒண் தாமரையாள், On Thamaraiyaal - அழகிய தாமரைப் பூவிற் கேள்வன், Kelvan - பிறந்த பிராட்டிக்கு ஒருவனையே, Oruvanaiye - வல்லபனான பெருமானொருவனையே நோக்கும், Nokkum - சென்று பற்றும் |