திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2150 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உணர்வார் ஆர் என்று பிறர் விஷயமாகச் சொல்லிற்று அது கிடக்க உன்னாலே தான் உன்னை அறியப் போமோ என்கிறார் – 69 | பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. | பதவுரை Show / Hideசோலை சூழ் குன்று எடுத்தாய், Solai Soozh Kuntru Eduththai - சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே! நீ பாலன் தனது உருஆய், Nee Palaan Thanathu Uruvaai - நீ சிறுகுழந்தை வடிவு கொண்டு ஏழ் உலகு, Ezhu Ulagu - எல்லா வுலகங்களையும் உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து ஆல் இலையின் மேல், Aal Ilaiyin Mel - ஓர் ஆலந்தலிரின் மேல் அன்று, Andru - பிரளயகாலத்தில் வளர்ந்த, Valarntha - கண்வளர்ந்த செயலை மெய் என்பர், Mei Enbar - (வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள். அன்று, Andru - (எல்லாம் அழிந்து கிடந்த) அக்காலத்தில் ஆல், Aal - அந்த ஆலானது வேலை நீர் உள்ளதோ, Velaai Neer Ullathoo - வெள்ளங் கோத்துக்கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ? விண்ணதோ, Vinnathoo - (அல்லது) (நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ? மண்ணதோ, Mannathoo - (பிரளய ஜலத்திலேகரைந்துபோன) பூமியிலுள்ளதோ? சொல்லு, Sollu - இவ்வாச்சரியத்தை நீயே சொல்லவேணும். |