திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2151 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2151முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இருந்தபடி இது வாகையால் ஒரு சக்தனைப் பற்ற வேண்டி இருந்தது இறே ஆன பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு இவனை ஆஸ்ரயிங்கோள்   – என்கிறார் – 70
சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு, சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால், நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.
பதவுரை Show / Hide
திருமாலை, Thirumalai - பிராட்டியோடு கூடினபெருமானை
நல் இதழ் தாமத்தால், Nal Idhal Thaamaththal - அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால், Velviyal - யாகம் முதலிய ஸத்கரு மங்களாலும்
தந்திரத்தால், Thandhirathal - (மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால், Mandhirathal - (க்ரியாகலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும், Vizhum Udambu Sellum Thanaiyum - அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின், Thozhumin - தொழுங்கள்;
சொல்லும் தனையும், Sollum Thanaiyum - (இவற்றை செய்ய சக்தியில்லாவிட்டால்) (உங்களுக்குச்) சொல்லக்கூடிய சக்தியுள்ளவரையிலும்
நாமத்தால், Namaththal - திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல், Aethuthir Ael - புகழ்ந்தீர்களாகில்
நன்று, Nandru - அது மிகவும் நல்லது.