திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2156 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2156முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி ருத்ரனுக்கும் கூட ரஷகனான உன்னை ஆஸ்ரயிக்கப் பெற்றவர்கள் இறே விரோதிகளைப் போக்கப் பெற்று நல் வழி போனார் ஆகிறார் என்கிறார் – 75
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள், ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச் சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி.
பதவுரை Show / Hide
திருமாலே, Thirumaalee - லக்ஷ்மீநாதனே!
உன்னை, Unnai - (பரமபுருஷனான) உன்னை
உன்ன, Unna - ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு, Kaappu - பிரதிபந்தகங்கள்
கழியும், Kazhiyum - விட்டு நீங்கும்;
உன்னை உன்ன, Unnai Unna - உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு, Aruvinaihal Aappu - போக்கமுடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும், Avizhnthu Ozhiyum - அவிழ்ந்துபோம்;
உன்னை சிந்திப்பார்க்கு, Unnai Sindhippaarakku - உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை, Mooppu Illai - கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார், Nin Adiyai Vandhi Paar - உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி, Vazhi - அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-, Kaanbar - கண்டு அனுபவிக்கப்பெறுவர்கள்.