திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 216 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
216பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 4
தேனுகனாவி செகுத்து பனங்கனி தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4
பதவுரை Show / Hide
தேனுகன்,Thenukan - தேநுகாஸுரனுடைய
ஆவி,Aavi - உயிரை
செகுத்து,Sekuththu - முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி,Panangani - (ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
எறிந்திட்ட,Erindhitta - (அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்,Thadam Perun Tholinal - மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து,Vaanavar Kon Vida Vandha Mazhai Thaduththu - தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆனிரை,AaNirai - பசுக்களின் திரளை
காத்தானால்,Kaaththaanal - ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
அவை,Avai - அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;