திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2161 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) மகா பலி பக்கல் நின்றும் விபூதியை மீட்டுக் கொண்டு நோக்கின் அவ்வளவே அன்றிக்கே ஒருவன் சரணம் புகுந்தால் அவனுக்கு அசாதாரண பரிகரத்தோடே விரோதம் உண்டே யாகிலும் ந ஷமாமி -என்கிறத்தைப் பாராதே அவனோடு பொருந்த விட்டு அவனை இட்டு வைத்தே நோக்குவிப்பான் ஒருவன் – என்கிறது – அதாகிறது பாதாளத்திலே ஸூமுகன் என்றொரு சர்ப்பமாய் அவனைப் பெரிய திருவடி ஆமிஷமாகக் கணிசித்து இருக்க அத்தைக் கேட்டு அஞ்சி சர்வேஸ்வரன் இந்திர லோகத்திலே உபேந்திர மூர்த்தியாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்க அங்கே சென்று அவன் எழுந்து அருளி இருந்த சிம்ஹாசனத்திலே சுற்றிக் கொண்டு கிடந்தான் ஆய்த்து – சரணம் புகுவார்க்கு லஷணம் பவத் விஷய வாசின -ஆரண்ய -1-20-என்னும் இவ்வளவே இறே பெரிய திருவடி அங்கே சென்று காணாமே பெரிய வேகத்தோடு இங்கே இவன் இருந்த படியைக் கண்டு அந்தரங்கராய் வஹிக்குமவர்கள் பொதுவாகச் சில சொல்லுமா போலே சொல்ல சர்வேஸ்வரனும் அத்தைக் கேட்டுப் பின்னையும் அவனை விட்டே சமாதனத்தைப் பண்ணி அவன் கையிலே காட்டிக் கொடுக்க அவனும் அத்தை ஆபரணமாக உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கிக் கொடுத்த படி சொல்லுகிறது – 80 | அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,
படுத்த பொரும்பாழி சூழ்ந்த – விடத்தரவை,
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,
அல்லாதும் ஆவரோ ஆள்? | பதவுரை Show / Hideஅடுத்த கடும்பகைஞற்கு, Adutha Kadumbakaiyarnku - நெருங்கிய கொடிய சத்துருவான கருடனுக்கு ஆற்றேன் என்று, Aatren Endru - (நேரே நின்று பிழைத்திருக்கத்தக்க) வல்லமையுடையேனல்லேன்’ என்று சொல்லிக்கொண்டு ஓடி, Odi - விரைந்து ஓடிப்போய், படுத்த பெரு பாழி, Padutha Peru Pazhi - (எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு) விரித்த பெருமைபெற்ற படுக்கையாகிய சேஷனை சூழ்ந்த, Soolntha - சுற்றிக்கொண்ட விடத்து அரவை, Vidathu Aravai - விஷத்தையுடைய ஸுமுகனென்கிற ஸர்ப்பத்தை வல்லாளன் கை கொடுத்த, Vallalan Kai Kodutha - வலிமையுடைய கருடனது கையிலே (அடைக்கலப் பொருளாகத்) தந்து ரக்ஷித்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும், Maa Meeni Maayavanukku Alladum - சிறந்த திருமேனியையுடைய எம்பெருமானுக்குத் தவிர ஆள் ஆவரோ, Aal Aavaro - (மற்ற தேவதாந்தரங்கட்கு) அடிமையாவர்களோ. |