திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2169 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2169முதல் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) - வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப் பெற்றேனே என்கிறார் 88
நாடிலும் நின்னடியே நாடுவன், நாடோறும் பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும் பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு, என்னாகி லென்னே எனக்கு?
பதவுரை Show / Hide
நாடிலும், Naadilaam - (மனத்தினால்) தேடும் போது
நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளையே
நாடுவன், Naaduvan - தேடுவேன்;
நாள் தோறும், Naal Thoram - எப்போதும்
பாடிலும், Paadilaam - வாய்விட்டு ஏதாவது சொல்லும்போதும்
நின் புகழே, Nin Pugazhe - உனது புகழ்களையே
பாடுவன், Paaduvan - பாடுவேன்;
சூடிலும், Soodilaam - ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான், Pon Aazhi Aendhinaan - அழகிய திருவாழியைத்தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே, Pon Adiye - அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு, Sooduveerkku Enakku - சிரோபூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என், En Aakil En - எது எப்படியானாலென்ன?