திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2170 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழ்ப் பிறந்த லாபமானது திரியட்டும் பின்னாட்டும்படி சொல்லுகிறார் – நாட்டார்க்கு நினைக்கையில் உள்ள அருமை போரும் இவர்க்கு இவ்விஷயத்தை மறைக்கைக்கு – 89 | எனக்கா வாரா ரொருவரே, எம்பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், – புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,
மாமேனி காட்டும் வரம். | பதவுரை Show / Hideஎனக்கு, Enakku - (எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திரபூதனான எனக்கு ஆவார் ஆர் ஒருவரே, Aavar Aar Oruvare - ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? [எவருமில்லை;] எம்பெருமான், Emperumaan - அந்த ஸர்வேச்வரனும் தானே தனக்கு ஆவான் அல்லால், Thane Thanakku Aavaan Allaal - தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல் மற்று, Mattru - அவன்தானும் எனக்கு ஒப்பாகவல்லனோ? புனம் காயா பூமேனி, Punam Kaayaa Poomeeni - (இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்) தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும் காண பொதி அவிழும் பூவைப்பூ, Kaan Pothi Avizhum Poovaippoo - காணக்காணக் கட்டவிழா நிற்கும் பூவைப்பூவின் நிறமும் வரம், Varam - சிறந்ததான மா மேனி, Maa Meeni - (அவனது) கரிய திருமேனியை காட்டும், Kaattum - எனக்குக் காட்டா நிற்கும்.[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.] |