திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2172 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும் இதர விஷயங்களிலே ருசி யற்று அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது – என்கிறார் – ஹேயத்திலே ஹேயதா புத்தியும் உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும் வேண்டாவோ -பேற்றுக்கும் கீழில் பாட்டில் ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று – இதில் – ருசி தான் வேண்டுவது – என்கிறது – 91 | ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், – ஏனத்
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
மருவாதார்க் குண்டாமோ வான். | பதவுரை Show / Hideஊனக் குரம்பையின், Oonak Kurampaiyin - மரம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே உள் புக்கு, Ul Pukku - உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து] இருள் நீக்கி, Irul Neekki - (நினைக்கிற அஜ்ஞாநமாகிர) இருட்டைப் போக்கி ஞானம், Gyaanam - தத்வஜ்ஞாநமாகிற சுdடர், Sudhar - விளக்கை கொளீஇ, Kolii - ஏற்றி ஏனத்து உரு ஆய், Eanathu Uru Aay - வராஹரூபியாகி உலகு இடந்த, Ulaku Idantha - (பிரளயங்கொண்ட) பூமியைக்குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய பாதம், Paatham - திருவடிகளை நாள்தோறும், Naalthoorum - எப்போதும் மருவாதார்க்கு, Maruvaathaarikku - ஸேவியாதவர்களுக்கு வான் உண்டாமோ, Vaan Undaamo - பரமபதம் கிடைக்குமோ?[கிடைக்கமாட்டாது.] |