திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2174 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே ஆஸ்ரித விஷயத்திலே ஒரு பஷ பாதம் சொல்லிற்றே நின்றது நீர் சொல்லுகிற பஷ பாதம் நாம் அறிகிறிலோமீ -என்ன இல்லையாகில் நீ வெருமனேயோ ஹிரண்யன் மேலே சீறினாயோ அவனுக்கு எதிரியாகப் போரும்படியாய்ச் சீறினாயோ-என்கிறார்- கீழில் பாட்டில்-வாத்சல்யமாய் வாத்சல்ய கார்யமான சீற்றத்தை அனுபவிக்கிறார் – 93 | வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
சேவடிமே லீடழியச் செற்று. | பதவுரை Show / Hideபூ வடிவை ஈடு அழித்த, Poo Vadivai Eedu Azhitha - புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான] பொன் ஆழி கையா, Pon Aazhi Kaiyaa - அழகிய திருவாழியைக்கொண்ட திருக்கையையுடையவனே! வயிறு அழல, Vayiru Azhala - (என்ன தீங்கு நேருமோவென்று அநுகூலர்) வயிறெரியும்படி வாள் உருவி வந்தானை, Vaal Uruvi Vandhaanai - வாளை உருவிக்கொண்டு வந்தவனான ஹிரண்யனை அஞ்ச, Anja - (அவன் உன் வடிவத்தைக்கண்டு) நடுங்கும்படி நின் சேவடி மேல், Nin Saevadi Mael - உனது திருவடிகளின்மேலே (போட்டுக்கொண்டு) பொறி உகிரால், Pori Ukiraal - நாநாவர்ணமான நகங்களினால் ஈரு அழிய செற்று, Eeru Azhiy Settru - கட்டுக்குலைந்து போம்படி கொன்று எயிறு இலக, Eiyiru Ilaka - (பின்னையும் சீற்றம் மாறாமையால்) பற்கள் வெளித்தெரியும்படி நீ வாய் மடித்தது, Nee Vaai Madiththathu - நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது என், En - ஏதுக்காக?. |