திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2177 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2177முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சேதனர் செய்தபடி செய்ய நெஞ்சே நீ முன்பு நான் சொல்லுகிற இத்தை அழகிதாக புத்தி பண்ணு என்கிறார் – 96
திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய், அறம்பாவ மென்றிரண்டு மாவான், – புறந்தானிம் மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே, கண்டாய் கடைக்கட் பிடி.
பதவுரை Show / Hide
என் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான், Aram Paavam Endra Irandum Aavaan - புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய், Sem Kan Maal Kandaai - புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம்மண் தான், Imman Thaan - இந்தப்பூமியும்
மரி கடல் தான், Mari Kadal Thaan - அலையெறிகிற கடலும்
மாருதம் தான், Maarudham Thaan - வாயுவும்
வான், Vaan - ஆகாசமும்
புறம் தான், Puram Thaan - இவை தவிரவுள்ள மஹாந் முதலிய தத்துவங்களும்
தானே கண்டாய், Thane Kandaai - (ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்) அந்தத் திருமாலேயாவன்;
கடைக்கண், Kadaikkan - முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
திறம்பாது, Thirampadhu - (இதுவே உண்மையென்பதை) தவறாமல்
பிடி, Pidi - உறுதியாகக்கொள்.