திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2179 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவிர் சடை மேல் பாய்ந்த -என்று கொண்டு அவன் திருவடிகளிலே ஒரு சம்பந்தம் உடைய கங்கையை இவன் ஜடையிலே தரித்தான் என்று இவனைக் குறையச் சொல்லுகிறது என்- அவனைத் தனியே ஈஸ்வரனாகவும் அவன் ஒரு கார்யத்துக்குக் கடவனாகவும் அன்றோ சொல்லுகிறது என்னில் அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே வந்தது அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் – 98 | பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன். | பதவுரை Show / Hideபொன் திகழும் மேனி, Pon Thigazhum Meeni - பொன்போல விளங்குகின்ற உடலையும் புரி சடை, Puri Sadai - பினின சடைமுடியையுமுடையவனாய் அம், Am - அழகிய, புண்ணியனும், Punniyanum - (ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தையடையனான ருத்ரனும் நின்று உலகம் தாய நெடு மாலும், Ninru Ulagam Thaaya Nedumaalum - நின்று உலகங்களையெல்லாம் அளந்துகொண்ட ஸர்வேச்வரனும் என்றும், Endrum - எக்காலத்திலும் இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும், Irivar Angathaal Thirivar Aelum - இருவராகி வெவ்வெறு வடிவத்தைக்கொண்டு இருந்தார்களேயானாலும் ஒருவன், Oruvan - சடைபுனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன் ஒருவன் அங்கத்து, Oruvan Angathu - நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே என்றும், Endrum - எப்போதும் உளன், Ulan - ஸத்தை பெற்றிருப்பன். |