திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 218 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
218பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 6
தள்ளித் தளிர் நடை யிட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தினுள்ளே அவளை யுற நோக்கி கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்–2-10-6
பதவுரை Show / Hide
தள்ளி தளர்நடை இட்டு,Thalli Thalarnadai Ittu - (காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே) தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு
இளம் பிள்ளையாய்,Iam Pillaiyaai - (நடக்க வேண்டும்படியான) இளங்குழந்தையாய்
கள்ளத்தினால்,Kallaththinal - (இருக்கச் செய்தே) (தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த,Vandha - (தன்னைக் கொல்ல) வந்த
பேய்ச்சி அவளை,Peychi Avalai - பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி,Ullaththin Ullae Ura Nokki - (’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
முலை,Mulai - (பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே) அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்,Uyir Thulla Suvaiththadhaal - (அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
துவக்கு அற,Thuvakku Ara - (அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்,Undaanaal - (அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;