திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2180 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2180முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன் திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான் ஏது என்னில் விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் – ஆன பின்பு  -நெஞ்சே நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் – நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு திரு உள்ளம் பயப்பட நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் – என்கிறார் – 99
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய், வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும், உள்ளத்தி னுள்ளனென் றோர்.
பதவுரை Show / Hide
நல் நெஞ்சே, Nal Nenjee - எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன், Uthaman - புருஷோத்தமனான எம்பெருமான்
உளன்கண்டாய், Ulan Kandai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய், Endrum Ulan Kandai - எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து, Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன், Ulan - நித்யவாளம்
கண்டாய், Kandai - பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும், Vellaththin Ullaanum - திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும், Vengadathu Meyaanum - திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று, Ullaththin Ullaan Endru - இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்யவாஸம் பண்ணுகிறானென்று
ஓர், Oru - தெரிந்துகொள்.