| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 22 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்.) 10 | செந்நெ லார் வயல் சூழ் திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப் பன்னு பாடல் வல் லார்க்கு இல்லை பாவமே–1-1-10 | செம் நெல்,Sem nel - செந்நெல் தாந்யங்களால் ஆர்,Aar - நிறையப் பெற்ற வயல்,Vayal - கழனிகளாலே சூழ்,Soozh - சூழப்பட்ட திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரிலே மன்னு,Mannu - பொருந்தி வர்த்திக்குமவனாய் நாரணன்,Naaranan - நாராயண சப்த வாச்யனாய் நம்பி,Nambi - ஸர்வ குண பூர்ணனான ஸர்வேச்வரன் பிறந்தமை,Pirandhamai - திருவவதரித்தபடியை மின்னு,Minnu - விளங்கா நின்ற நூல்,Nool - யஜ்ஞோபலீதத்தையுடைய விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார் விரித்த,Viritha - விஸ்தரித்து அருளிச் செய்த பன்னு,Pannu - ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான இப் பாடல்,Ep paadal - இப் பரசுரங்களை வல்லார்க்கு,Vallaarukku - ஓத வல்லவர்க்கு பாவமில்லை,Paavamilai - பாபமில்லை. |