திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 220 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
220பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 8
தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்–2-10-8
பதவுரை Show / Hide
தாழை,Thaazhai - (கரையிலே) தாழைகளையும்
தண் ஆம்பல்,Than Aambal - (உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய
தடம் பெரும்,Thadam Perum - மிகவும் பெரிய
பொய்கை வாய்,Poigai Vaai - தடாகத்தினுள்ளே
வாழும்,Vaazhum - வாழ்ந்து கொண்டிருந்த
முதலை,Mudhalai - முதலையின் வாயாகிய
வலைப்பட்டு,Valaipattu - வலையிலே அகப்பட்டுக் கொண்டு
வாதிப்பு உண்,Vaadippu Un - துன்பமடைந்த
வேழம்,Vezham - ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயர்,Thuyar - வருத்தம்
கெட,Keda - தீரும்படியாக
விண்ணோர் பெருமான் ஆய்,Vinnor Perumaan Aai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய்
ஆழி,Aazhi - (அப்பொய்கைக் கரையிலே சென்று) சக்ராயுதத்தாலே
பணி கொண்டானால்,Pani Kondaanal - (முதலையைத் துணிந்து , கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
அதற்கு,Adharku - அந்த யானையின் திறத்தில்
அருள் செய்தானால்,Arul Seidhaan - (இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;